போர்விமானம் கண்டு

போர்விமானம் கண்டு....

இறப்புக்கு அஞ்சி,
இரையை களைந்து,
இறக்கைகளை அடக்கி,
இலைகளிடமும்,கிளைகளிடமும்,
இரவல் கேட்கிறது,
இருப்பிடத்தை.-இந்த
இலங்கைப் பறவைகள்.
இயந்திரப் பறவைகள்,
இரைச்சலுடன் வரும்போது.

எழுதியவர் : நாஞ்சில் சிவகுமார் (22-Dec-13, 7:51 pm)
பார்வை : 56

மேலே