ஆம் ஆத்மி கட்சி

ஒன்றே குலம் என்றார்கள்
ஒருவனே தெய்வம் என்றார்கள்
சீர்திருத்தம் வேண்டுமென்றார்கள்
இரண்டு எழுத்துத் தந்தார்கள்

இரண்டு எழுத்தைச் சேர்த்து இழுத்தார்கள்
மூன்று எழுத்துத் தந்தார்கள்
மூன்று எழுத்தில் மூச்சு இழுத்தவரோ
நாலு எழுத்துத் தந்தார்கள்

நாலு எழுத்தைப் பிடித்து இழுத்தார்கள்
ஆறெழுத்துத் தந்தார்கள்
ஆறேழுத்தே தலைஎழுத்தாய்
ஆக்கி விடப் பார்ப்பார்கள்

ஏமாந்து இருந்து விட்டால்
ஏளனம் தான் செய்வார்கள்
மௌனமாக இருந்து விட்டால்
சம்மதம் என்று சொல்வார்கள்

கடவுளை நம்புகிறவர்கள்
காட்டுமிராண்டி என்றார்கள்
காட்டுமிராண்டி கூட்டத்திற்கே
தலைவர்கள் ஆனார்கள்

கோட்டையில் மாணிக்கமாய்
காமராசர் இருந்தார்கள்
கூவத்தில் மாணிக்கத்தை யார்
வீசிவிடச் சொன்னார்கள்

பெற்றோர் செய்த தவறுக்கு
சிறு பிள்ளைகள் என்ன செய்வார்கள்
கூவிக் கூவி அழைத்தாலும்
குரலைக் கேட்க மாட்டார்கள்

கூண்டுக்கிளியாய் அவரை
யாரடைத்து வைத்தார்கள்
கூண்டுக்குள் அடைந்திருந்தால்
சிறகுகள் வளராது

வளர்ந்திடும் சிறகையும்
அறுத்தெடுக்கத் துணிவார்கள்
கூண்டை உடைத்தெறிய வேண்டும்
கோடானு கோடி மக்கள் உள்ளார்கள்

வருவீர் வருவீர் நம்
பிற்காலம் ஆகும் பொற்காலம்
மக்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும்
பொற்காலத்தை உருவாக்கும்

ஒற்றையடிப் பாதையிலே
ஊரைதாண்டி வருவீர்
ஆசைமுகம் இல்லையென்றால்
கவலைகள் கொள்ளாதீர்

தோல்வி எல்லாம் வெற்றிக்கான
ஏணிப்படிகள் ஆகிவிடும் பாருங்கள்
ஊரோடு ஒத்துவாழ் என்று
ஔவை பாட்டி சொன்னார்கள்
ஊரை விட்டு வெளியில் வந்தார்
கொலம்பஸ் என்ன தந்தார் பாருங்கள்

ஆடிபெருக்கு கரைபுரண்டால்
அணை செய்து நிறுத்துங்கள்
ஆளுக்கொரு பக்கம் நின்றால்
அழிவுதான் உணருங்கள்

கூவிக் கூவி அழைக்கிறோம்
கூடவே வாருங்கள்
ஒத்தக்கை இந்நாட்டில்
செய்த கோலம் பாருங்கள்

நம்ம வீட்டுப் பிள்ளைகள்
டெல்லி மக்கள் ஆவார்கள்
ஒத்தக்கையில் துடைப்பத்தை
எடுத்தவர்கள் விட்டார்கள்

ஆளுக்கொரு துடைப்பத்தை
எடுத்து உயர்த்திக் காட்டுங்கள்
ஊரே அணிந்திருக்கும்
திருவிழாக் கோலங்கள்

எழுதியவர் : (22-Dec-13, 11:40 am)
பார்வை : 69

மேலே