பாரதியின் கோபமும் புது வரமும்
தனி ஒருவனுக்கு
உணவில்லையெனில் - இந்த
ஜகத்தினை அழித்திடுவோம் - இந்த
பாரதியின் கனவுக் கவிதை
வாழும் காகிதத்தை
விரித்தபடி
தெருவில்
வயிற்றுப் பசிக்காய்
பிச்சை கேட்டு ஆடுகிறாள்
ஓர் சிறுமி
அவளையும் இச்சையுடன்
பார்க்கும் சில பதர்களை
கண்டு
காகிதத்தில் கலங்கி நிற்கும்
பாரதி
புதிதாய் கதறுகிறான்
நின்னை
சில வரங்கள் கேட்பேன்
எனக்களிப்பாய்
கைத்துப்பாக்கி ஒன்று
கைவசம் ஆதல் வேண்டும்
உயிரது எனக்குள் மீண்டும்
இப்போதே வேண்டும்
இவர்களை சுட்டு
வீழ்த்த வேண்டும்
இச்சையை
தீயிட்டு கொளுத்த வேண்டும்
பிச்சையை தூண்டும்
வயிற்றுப் பசிக்கோர்
வழி செய்தல் வேண்டும் ....!

