புதுப் புறம் நானூறு1
1.கடவுள் வாழ்த்து
அவன் சடையில் சூடுவது
கொன்றைப் பூ
சந்தமுற அவனது மார்பில்
சந்தன மாலையாய்த்
தவழுவதும் அதுவே!
வெள்ளை நிறமுடைய
காளை, அவன் வாகனம்!
அவன் ஆட்சி நடத்திடும்
ராஜ்ஜியக் கொடியும் அதுவே!
கருநிற நஞ்சு,
அவன் கழுத்துக்குக் கறை தான்!
வேதம் ஓதும் அந்தணர்கள்
பாட்டிலும் மந்திரங்களிலும்
புகழ்வதும் அதையே!
பெண்மைக்கான தன்மை அற்றவன்
ஆனால் உடலிடையில் இடம் கொடுத்ததும்
ஒரு பெண்ணுக்குத்தான்!
நறுக்கி வைத்த நிலாபிறைநிலா
சடையில் மின்னும்,
பூத கணங்கள் பதினெட்டும்
கானத்தில் இசைப்பது
அதன் எழிலையே!
உலக உயிர்களின் பாதுகாவலன்,
நானில மக்களுக்கு இன்பமளிக்கும்
நீர்க்கங்கை பாய்ந்து
கொட்டும் சடையான் எனும்
அருந்தவத்தோனுக்கு வாழ்த்து!!
பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார்
விவேக்பாரதி