கண்ணா கருநீல வண்ணா
தர்மத்தை நிலைநாட்ட
கம்சனை வதைத்தாய்
நெறியை நிலைநாட்ட
கீதையைப் படைத்தாய்
அன்பை வெளிக்காட்டி
கோபியரைக் கவர்ந்தாய்
நற்பண்பை வெளிக்காட்டி
ராதையை மணந்தாய்
சேலை மாலையால்
திரௌபதியைக் காத்தாய்
மலர் மாலையால்
கோதையை ஈர்த்தாய்
குசேலன் குறைதீர்க்க
அவலைப் புசித்தாய்
பாண்டவர் குறைதீர்க்க
போர்க்களம் புகுந்தாய்
மார்கழித் திங்களில்
மகிழ்ந்தே படைத்தேன்
நீயருளிய பாமாலையை
உந்தன் பூமாலையாக !