தேவதைகளின் ராணி

ஆர்ப்பறிக்கும்
அமைதியில்
அழகான

வெண்மை
முகிலுக்குள்
வெண்ணிற
ஆடையணிந்து

மகிழ்ச்சியின்
உச்சம் கொண்டு
வானத்திலிருந்து
பறந்து வரவில்லை
தேவதையாய் இவள்

காற்றில் அசைந்து
மரங்கள் மலர்கள் தூவ
அழகிய அளவான
குறும்புன்னகையோடு

நளின சேலையணிந்து
நாகரீக மங்கையாக
வந்தவளை பார்த்து
வியந்து நின்ற
தேவதைகளை பார்த்து

மிரளாது மிளிராது
அமைதியாய் வந்து
நின்றால் இவள்
==தேவதைகளின் ராணியாய்==

...கவியாழினி ...

எழுதியவர் : கவியாழினி (24-Dec-13, 10:58 am)
பார்வை : 1188

மேலே