நாயின் கோபம்

குறைப்பதற்காக
குறைசொல்லாதே
யாரிடமில்லை
குறை
யாதார்த்தை நீயும்
மறக்காதே..

நாயென்று
ஏளனப்படுத்தாதே
நன்றிக்கு
உதாரணமே
நாம்தாமென்று
புரிந்துக்கொள்ள நீயும்
மறக்காதே..

உடமைகளை
உயிர்கொடுத்து
பாதுகாக்கும்
எம்மை
எக்காரணம் கொண்டும் நீயும்
மறக்காதே..

நாமும்
கடவுளின் படைப்புதான்
அதிலொன்றும்
குறையில்லை
அறிந்துகொள்ள நீயும்
மறக்காதே..

எழுதியவர் : வசீம் அக்ரம் (24-Dec-13, 12:14 pm)
பார்வை : 314

மேலே