பாரதியார் இன்னும் வாழ்கிறார் மக்கள் மனதில்

தமிழா !
நீ இவ்வுலகில் வாழ்ந்ததற்கு
நாங்கள் ஏழு ஜென்மத்திலும்
புண்ணியம் செய்துள்ளோம் !
தமிழா !
உன்னை மறக்கத்தான் முடியுமோ
இல்லை நினைக்காமல் இருக்கத்தான்
முடியுமோ !
தமிழா !
நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும்
பாடுபட்ட தமிழன் அல்லவா நீ !
தமிழா !
உன்னை போல் ஒருவனை என்று நான்
காண போகிறேன் !
தமிழா !
நீ எங்களை விட்டு போகவில்லை
எங்களுடனை வாழ்கிறாய்
நல்ல படைப்புகளாக !
நீ வாழ்க ,
தமிழ் வாழ்க ,