சித்தரிப்புக்கள் உணர்த்தும் உண்மை

உளவியல் சமூகவியலென்று
எத்தனையோ இயல்கள்
நெறிப்படுத்த வந்தாலும்
அத்தனை இயலும் போதாது
தனி மனித நடத்தையை
செப்பமாய் புரிந்துகொள்ள .....!
பக்குவமடையா மனதின்
பாலியல் ஆசைகளுக்கு
திருப்தி கிடைக்காதபோது
பாய்ந்து கெளவுகிறது
அயல் வீட்டுப் பெண்ணை ......!
தள்ளாத வயதிலும்
தின்பண்டம் நீட்டி
வேட்கையுடன்
குழந்தையை நெருங்கும்
அதன் நாற்றங்களை
அறிந்திருக்க வாய்ப்பில்லை குழந்தை..!
ஆனாலும்
அதன் சித்தரிப்புக்களில்
தீர்த்துக்கொள்கின்றது
தனக்கான மோகத்தையும்
தனக்கான தாகத்தையும்.......!!!!!!!!!!!!
===========================================
தோழி துர்க்கா