மனவெளி

மௌனத்தால் நெய்த
ரணவனம்
கிழிசல் சுமக்கும் என்
மனவனம்...
வெள்ளிய திரை போர்த்தி
பூக்களின் அணை எழுப்பி
பட்டாம்பூசிகளின்
மழையில் நனைந்து
ரம்மியத்தின்
சாறுகுடிக்கும்
சாரல் கனவு உண்டு...
என்
கட்டற்ற கனவின் வெளி
மனித இயல்பின்
மாண்போடு பிணைந்தது
மாண்புதான் தொலைந்து
மனிதம் அழிந்ததே!
பின்னர் என்
மெல்லிய மனவெளிக்கு
இயல்பின் புன்னகை ஏது...
பணப்புழு நெளிவில்
நாறும் மனிதம்..
சாதிப்பித்தின்
சாக்கடை கருப்பு...
வானம் வரை வெள்ள
வா வா
மயக்கம் தொலைத்து
மழுங்காத நினைவெடுத்து
யுத்தம் தொலைத்து
வெறித்த நினைவோடு
மிதக்கும் என் மனவெளியெங்கும்
ரணத்தின் விசும்பல்.

எழுதியவர் : விமல் (24-Dec-13, 4:55 pm)
சேர்த்தது : சுவிமல்ராஜ்
பார்வை : 77

மேலே