இயேசு

ஆட்டுத் தொழுவுக் கூடத்திலே
அழகு தோய்ந்த ஆண்மகனாய்
கன்னிகைக்கு குமரனாய் - எம்
ஏசு கிறித்து பிறந்தாரே...
வெள்ளி முளைத்த இரவினிலே
ஒரு வெளிச்சம் ஒளியாய் ...
பிறந்தது இறை மகனே
இடையர்கள் மகிழ்ந்து களியாடினரே ...
பாலக பருவத்தில் அறிவிலே
பெற்றோரின் இடத்தில் மதிப்புடனே
நண்பர்களிடத்தில் அன்புடனே திறன்
கொண்ட திருமகனாய் வாழ்ந்தாரே ...
ஈராறு சீடர்கள் சேர்ந்தனரே
இயேசு சொற்பொழிவை பகிர்ந்தனரே
அவரின் போதனைகளை பரப்பினரே
இறைமகனாரென இயேசு ஆனாரே ...
அன்பை வளர்க்க கூறினாரே
பகையைத் துரத்த வேண்டினாரே
மன்னிப்பின் மாண்பை சொன்னாரே
நேயம் தழைக்க வழிகோளினாரே ...
சீடர்களில் ஒருவன் உலையானான்
மூடர்கள் கொல்லத் துணிந்தனரே
சிலுவையில் அறையச் செய்தாரே
இறைமகன் மீண்டும் வந்தாரே...
மக்கள் மனதில் வாழ்கின்றாரே... இயேசு
மக்கள் மனதில் வாழ்கின்றாரே...
- சு.சுடலைமணி