எம்,ஜிஆர்எனும் புகழ் மந்திரம்

எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்.—வள்ளல்
இருந்தாய் எனுமொரு நிரந்தரம்.
கோடியிலொருவன் மனிதன்-எம்மில்
கூடி வாழ்ந்த அதிசயம்.

வண்ணமும் எண்ணமும் தங்கம்—நீ
வாழ்ந்த வரையும் சிங்கம்.
இன்னமும் உன்னையும் வெல்ல—இனி
என்றும் பிறப்பார் இல்லை.

கடவுள் தானவன் முதலாளி—அவன்
கண்டதில் நீயொரு தொழிலாளி.
கொடுப்பது எல்லாம் கொடுத்தான்.—அவன்
கொடுத்ததை எல்லாம் கொடுத்தாய்.

மரணம் என்பது உனக்கில்லை—இந்த
மண்ணும் மரணம் ஆவதில்லை.
இன்னும் அள்ளிக் கொடுக்கிறாய்—என்றும்
ஏழையின் மனங்களில் சிரிக்கிறாய்.

இருந்த போது இழித்தோரும்—உயிர்
துறந்த போது பாடினர்.
இன்றும் உன் முகம் காட்டாமல்-ஓட்டு
எவர்தான் துணிவரோ கேட்டுத்தான்!.

மறைந்தும் வழங்கும் வள்ளலே—உனை
மறைத்திட எது எழும் இமயமே!
நிறைத்தும் உன்புகழ் போற்றுமே!---தன்
திரைகளால் பாடி வங்கமே!

கொ.பெ.பி.அய்யா.

.

எழுதியவர் : கொ.பெ .பி.அய்யா. (25-Dec-13, 1:31 am)
பார்வை : 1620

மேலே