வாழ்த்துப்பூ மழை

எண்ணங்கள் யாவும் இனிமையாக
==எப்போதும் மகிழ்ச்சி பூக்களாக
வண்ணங்கள் ஒன்றே வாழ்க்கையாக
==வசந்தத்தில் வீசும் தென்றலாக
இன்னல்கள் ஓடும் மேகமாக
==இன்பமே என்றும் நிலையானதாக
புன்னகை பூக்கும் தோழமைகளே
==பொழிகிறேன் எனது வாழ்த்துக்களை.

எழுத்தில் மட்டுமல்ல என் இதயத்தில் வாழும்
தோழமைகள் யாவருக்கும் இதயபூர்வமான
கிறிஸ்மஸ் + புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (25-Dec-13, 1:48 am)
பார்வை : 375

மேலே