மாறாத நினைவுகள்
சகாப்தங்களுக்கான
கண்ணீரை தருவதற்காக
நிஷப்தங்களாய் வந்த நீ
தசாப்தம் காண்கிறாய்!
நினைவில் வாழும்
உறவுகளை
நினைத்துப் பார்ப்பதற்காக
நீ வந்து போன
நாளின் நினைவுகள்
நெஞ்சத்தில் கசிகிறது.
உன்னைப் பற்றிய
நினைவுகள் கூட
நீர் மேல் எழுத்தாய் போனாலும்
நீரால் நீ எழுதிய எழுத்துக்கள்
கல்வெட்டாய் என்றும்.
ஆங்காங்கே
நீ வந்த தடங்கள்
மெல்ல மெல்ல
மாறிப் போய்விட்டாலும்
நில ஆக்கிரமிப்பில்
மோசடிக்காரர்களை
உன் பேரலைகளால்
மிஞ்சிவிட்ட உன்
ஆக்கிரமிப்பு
மனம் விட்டு மாறாது சுனாமியே..!