22 பாசமாயுள்ள பெற்றோர்கள்
சொந்தக் கவிதை -22
இரவுப் பொழுதினிலே
கண்மூடிய வேளையிலே
மெல்லத் திறந்தனவே
என் இதயக்கதவுகள்.
உள்ளே புகுந்தனரே
என்அன்புக் குழந்தைகள்
விடிந்தப்பிறகும் கண்திறக்கவில்லை
ஏனெனக்கேட்டாள் நான்சொன்னேன்
கண்திறந்தால் மீண்டும்குழந்தைகள்
தனியேவிட்டுச் சென்றிடுவார்களலென
பாசமாயுள்ள பெற்றோர்கள்
எல்லோர்க்கும் இதுநித்தியக்கதையன்றோ! .