தோழா
அன்புள்ள தோழா ....!
விடியல் வெளிச்சத்தை
விரலுக்கு மை வைத்து
இருண்ட பாதையில் போய் விடாதே ...!
அரசியலை உண்மை என்று நம்பி விடாதே ...!
மழை நீருக்கு குலமேது கோத்திரம் ஏது ..?
மனிதருக்குள் மட்டும் ஏன்
இத்தனை கோத்திரங்கள் ...?-அதற்க்கு
ஏன் இத்தனை தோத்திரங்கள் ...?
ஏற்றம் பெற்ற ஜாதிகள் இங்கு
ஏறிக் கொண்டு போனால்.....
தாழ்ந்த ஜாதிகள் மட்டும் என்ன
இங்கு தயிர் கடைவதா .....?
கூழாங் கற்களுக்கு நடுவே
இருக்கும் வைரமே ..............!
சூரிய ஒளியின் சுடர் பட்டு
உன்னை நீ சுருக்கிக் கொள்ளாதே ...!
அறிவை அகண்டமாக்கு ........! உன்
ஆற்றலை வெளிச்சமாக்கு....................!