காதல் தீக்குச்சி
இன்றேனும் - உன்
மௌனவிரதத்தை மறந்து
நெஞ்சில் - தினம்
விளைந்து நிற்கும்
காதல்
தீபெட்டியைத் திறந்து
தயாராக இருக்கும்
ஆசை தீக்குச்சியை எடுத்து
மத்தாப்பு வெடியை
இன்று - நீ கொளுத்து
உன் செவ்விதழ் சிந்தும்
தேன் பனித்துளி ஈரத்தில்
வெடி(த்து) - நான்
நமத்துப் போகும்
முன்னால்...!