காதல் இனிது
பார்வை எனும்
முன்றேழுத்தால்
பாவையின்
கந்தப் பார்வையால்
இளம் - காளை நெஞ்சில்
பதிந்ததோர்க் காட்சி
அதுவே - இன்று
வாழ்க்கை ஒப்பந்தமாச்சு
காட்சி எனும்
முன்றேழுத்தால்
கவிதை எனும்
முன்றேழுத்து
கண்டபடி வளராதோ
நெஞ்சில்
கண்ணில்
காண்பவையெல்லாம்
காதலியாய் ஆகாதோ
சிறகு எனும்
முன்றேழுத்து
முளைத்திடும் முன்னே
அன்னப்பறவையாய்
வானில் தினம்
பறக்காதோ
உற்றார் உறவினர் சூழ
நண்பர்கள் கூடி
வாழ்த்து பாப்பாட
பூமியெங்கும்
கெட்டிமேளம் கேட்டிட
இணைந்திடும்
மணமக்கள் மனது
காதல் வாழ்க்கை
இனிதோ இனிது .....