சிறந்த புத்தாண்டே வருக
புதிய உறவே வருக !
அன்புடன் அழைக்கிறேன்!
ஆவலுடன் அணைக்கிறேன்!
இறந்தகால துன்பங்கள் மறைய,
முடிவில்லா பிரச்சனைகளுக்கு நல்ல
முற்று புள்ளி கொண்டு வருக!
புதுமை ஆண்டே வருக!
தமிழனுக்கென்றொரு நாடு கொண்டு வருக!
தமிழன் நெஞ்சில் ஆசை பொங்க வருக!
தமிழ்மக்கள் வாழ்வில் அல்லல்கள்
நீங்கட்டும். துன்பங்கள் தொலையட்டும். இருள் அகலட்டும்.மகிழ்ச்சி எங்கும் பொங்கட்டும்
புதுமை ஆண்டே வருக! நல் வழிகள் கொண்டு வருக
அற்புத புத்தாண்டே வருக.!
நாளெல்லாம் இனிக்க வருக!
இன்பம் பொங்கும் இனிமை வாழ்வும் தருக
எல்லாமும் நிறைந்திருக்க எல்லோரும் மகிழ்ந்திருக்க
உனதருள் வேண்டும் எமக்கெல்லாம்
வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்
அற்புத புத்தாண்டே வருக.!
சிறந்த புத்தாண்டே நீ வருக!
உன் வரவிலாவது ஏழைகள் சிரிக்கட்டும்!
இனியாவது நன்மை பிறக்கட்டுமென
எண்ணி எண்ணித்தான் புதிதாய் பிறக்கும்
உம்மை வரவேற்கிறோம்!வருக புத்தாண்டே
வளம்தனைத் தருக புத்தாண்டே.என்றும் தங்கி
,எங்களுக்கு நல்வாழ்வுதனை தருக புத்தாண்டே.
இனிய புத்தாண்டே வருக!
சிறந்த புத்தாண்டே வருக
புதிய உறவே வருக !
உன் வரவை ஒளி வெள்ளமாய்.வரவேற்று
. ஐம்பூதத்தையும் வணங்குகிறோம்