கொஞ்சம் கவிதை காற்றே

கொஞ்சம் கவிதை ..
காற்றே,என் இதயத் துளைகளில்
நுழைந்து இசைக்கிறாய் பல
புதிய ராகங்கள் ....
நீ இசைக்க நினைத்த
இனிய ராகங்கள் ...
இதயம் முழுவதும்
நிறைந்த தனிமை ராகங்கள் ..
இன்பமும் துன்பமும்
நிறைந்த உயிர் மூச்சின்
இனிய உதய ஜாலங்கள் ...
நேற்றுகடந்து வந்த
நந்தவன பூக்களின்
வாசம் எல்லாம்
ஒன்றாய் ஊற்றெடுத்து
உள்ளத்தில் வழிகிறது ..
மூங்கில் காடுகளில் உன்
பயணம் தடம் மாறி
அலைகிறது ....தென்றலாய் உரசி
செல்ல இதயம் தவிக்கிறது ....காற்றே
நீ எங்குதான் தவழ்கின்றாய்....
நன்றாய் மூச்சிழுத்து என்
நெஞ்சில் நிரப்புகிறேன் ....சுவாசம்
தனில் சேர்த்து சுகமாய்
ரசிக்கின்றேன் .....காற்றே.....

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Dec-13, 10:12 pm)
பார்வை : 63

மேலே