2014ல் மாற்றம் வேண்டும்

வேண்டும் வேண்டும் பெண்மை போற்றும்
உண்மையான நாடாய் இந்தியா மாற வேண்டும்

ஜாதி பேசும் இதழ்களை ஜோதி இல்லாத
இடத்தில போட்டு பூட்டி போட வேண்டும்

ஊழல் செய்யும் உலக நாயகர்களை
கூண்டோடு கைலாசம் நாம் அனுப்ப வேண்டும்

கோட்டையில் இருந்து கொண்டு சட்டத்தில்
ஓட்டை போடுபவர்களை
சட்டையில்லாமல்
சாட்டையால் சாகடிக்க வேண்டும் ..

தப்பு செய்யும் ஆசிரியர்களை
ரெண்டு அப்பு அப்பி அவர்கள்
வாங்கிய பட்டங்களை நாம்
பறிக்க வேண்டும்

கற்சிலைக்கு மாலையிட்டு
கற்பழிக்கும் வீனரை சுட்டு
கழுகின் பசி தீர்க்க வேண்டும்.

அனாதைகளாய் பெற்றோரை
தவிக்க விடும் குழந்தைகளின்
குடியுரிமை பறிக்க பட வேண்டும் ..

குழந்தைகளை அனாதையாக்கும்
வினோத உறவுகளை எல்லாம்
சிறையில் அனாதையாக்க வேண்டும்

கலாச்சாரங்களை உயிர்பிக்க வேண்டும்
பள்ளிகளில் கலாச்சாரக் கல்வி என்ற ஒன்றை
அறிமுகம் படுத்த வேண்டும்

தாய்மொழியை கொச்சை படுத்துவோரை
தாய் நாட்டை விட்டே துரத்தி அடிக்க வேண்டும்

திருட்டு ஒழிக்க பட வேண்டும்
திருடர்கள் திருத்த பட வேண்டும் -சட்டத்தில் இத்திருத்தங்கள் நாம் கொண்டு வர வேண்டும்
விரைவில் இந்தியா வல்லரசு ஆகும்
அதற்க்கு முன்னாள் நல்லரசு ஆகும்

அனைவருக்கும் என் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : ஜெகன் (31-Dec-13, 1:04 pm)
பார்வை : 260

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே