வானம்
தொடர்வதற்கு தொடர் கதையும் அல்ல,
முடிப்பதற்கு முடிவுரையும் இல்லை,
இருந்தும் நான் எழுதிய கவிதைக்கு
ஏராளமான முற்றுப்புள்ளிகள்-விண்மீன்
ஆச்சிறியக் குறி இரெண்டு மட்டும்தான்
அதிகாலை உலகை ஒளிமயமாக்கும் சூரியனும்!
இரவுப்பொழுதில் பிரகாசிக்கின்ற நிலவும்!