சிறு உயிரின் அன்புத்தேடல்
அன்பே! என் அன்பே !காதல் சொல் அன்பே !
உன்னைத் தேடுதடி நெஞ்சம் .
மேகத்தில் நீ தான், கலைந்தோடிப் போனால்,
தேன் சாரல் என்று என் தேகம் சேரும்?
ரோஜா இதழ் உன் முத்தங்கள் சொல் சொல்!
வானில் நிலவு பார்க்கையில் !
உன் நெற்றிப்பொட்டின் ஞாபகம்.
மின்னும் விண்மீன் பார்க்கையில் !
உந்தன் கண்கள் ஞாபகம்.
கிளியின் அலகு! பார்க்கையில்
உந்தன் கோபம் ஞாபகம்.
நதியின் வளைவு! பார்க்கையில்
பாவை உந்தன் ஞாபகம்.
உன்னோடுதான் நான் இல்லையா ? சொல் சொல்
வாழ்க்கை என்ன வாழ்க்கை !
நீயும் இல்லை என்றால்.
உயிரும் போன பின்னே !
உடலும் இங்கு வீணோ ?
கவிதை ஒன்றைத் தேடினேன்!
உந்தன் பெயரே ஞாபகம்.
சிவந்த மலர்கள் பார்க்கையில் !
உந்தன் முத்தம் ஞாபகம்.
காற்றிலே மலர்ந்த பூக்களும் !
உந்தன் வாசம் தேடுதே !
இசையின் உயிரும் நீ என !
உந்தன் பாதம் [அவளின் பாதக்கொலுசு] தேடினேன்!
மாலைப்பொழுதும் தோன்றினால் மனமும்
கலங்குவதேனடியோ ?
உன்னைத்தேடி நானும் தொலைந்ததென்ன காட்டிலே !
எந்தன் பாதம் தேடினால் !
உன்னை வந்து சேர்கிறேன்.
கரிய மேகக்கூட்டங்களே!
கலைந்து செல்லுங்களேன்!
தாழை மலர் சூடிட என்னவளின்
கார்மேகக் கூந்தல் இங்கு இல்லையே!
அதிகாலை உதித்திடும் சூரியனே !
வான முற்றத்தில் கோலமிடும்,
என் கன்னி அவளைப்பர்த்தல் -சொல்லிவா
கண்ணன் அங்கு ஏங்குகிறான் !
உந்தன் கானம் கேட்க்காமல் நாளும்,
பொழுதும் கலங்குகிறான்.
இன்னும் ஒரு துளி நீர்தான் கண்களில் மீதி!
உந்தன் பூவிரல்கள் !
வீணை மீட்கவில்லை என்றால்,
அழகிய உன் பாதம் அவனைத்தேடிப் போகவில்லை என்றால்!
உன்னைச்சேரும் வரை அவன் உயிர் வாழும் மண்ணிலே !
உடல் பிரிந்திடுமே !ஞாயமா ?
வெறுப்பில் வாழ்ந்த கொடிமகள் !
வீரனின் விழிகள் கண்டதுமே !
விம்மி! விம்மி! அழுததேனோ?
புரிந்திருக்கும் என் மக்களுக்கு !
இது வெறும் ஊடலல்ல !
நதியில் ஆருவியா!
கடலில் நதியா! என்பதைப்போல் ,
உயிரில் கலந்து ஓடும் உதிரத்தைப்போல் !
" உணர்வுகள் " நிறைந்த இரு உயிரின் அன்புத்தேடல் .......
.