நானும் நீயும் பேனா நண்பன்
அன்னையும் தந்தையும்
கற்றுக்கொடுத்த ஆனா ஆவன்னாவோடு
ஆரம்பமானது நம் நட்பு ......
தத்தி தடுங்கி நடக்கும் பிள்ளைபோல
நீ தத்தி தத்தி எழுத கற்றுக்கொண்டது
என்னோடவே .......
உன்னுடைய பள்ளி கல்லூரி
பணிமுதல் உன்னுடனே தொடர்கிறது
என் நீண்டகால நட்பும் பணியும் .......
என்னை பற்றிய உன் கரங்களுக்குள்ளே
கரைந்துபோகிறேன் மையாய் மெய்யாய் ........
உன்னோட எல்லா வெற்றிகளுக்கும்
என் எழுத்துக்களால்
விதை விதைத்திருக்கிறேன் நான் ......
உன் சட்டைப்பைய்யும் புத்தக பையும்
என் நிரந்தர இடமாகிவிட்டது
எனக்கு தெரியாத ரகசியமென்று
உன்னிடம் ஏதுமில்லை ......
உன்னை அணுவாக வார்த்தைகளால்
பதித்தவன் நான்
இன்பத்திலும் துன்பத்திலும்
உன்னோடு பகிர்ந்துகொண்டது பலப்பல ........
நான் புனிதனானவதும்
பாவியாவதும் உன் கரங்கலால்தான் ........
என்னோட நிலையில் நான் உனக்கு
நல்லவற்றையே செய்திருக்கிறேன்
ஏன் தெரியுமா ?
என்னை எப்பொழுதும்
உன் இருதயித்தின் அருகிலே
நீ வைத்திருந்ததனால் !