வழிநடுத்துவோம் இப்புத்தாண்டில்
நாட்கள் சென்றுவிட்டது ஒருபக்கம்
நாட்கள் வந்துகொண்டுருக்கிறது இன்னொருபக்கம்
இதில் தோல்வி,வெற்றி,
அன்பு,பரிவு,வெட்கம் ,
துக்கம்,சோகம்,கண்ணீர்
எல்லாம் துடுப்பு போட்டு எதிர்நீச்சல் அடிக்கிறது
நம் வாழ்வு எதுவரை என்று நமக்கு தெரியாது
அதுவரையாவது நாம் ஒரு மனிதனாக இருப்போம்
மற்றவர்களை அடிமைபடுத்தும் மிருகமாக அல்ல
மற்றவர்களை வழிநடத்தும் ஒரு நண்பனாக,
தகப்பனாக,தாயாக....
வாழ்த்துகள் உங்கள் வாழ்க்கைக்கு...
வாழ்த்துங்கள் மற்றவர்களின் பாதைக்கு...,