சிற்றெறும்பு - நாகூர் கவி

ஓர்நாள் காலை
ஒரு சிற்றெறும்பு
ஒரு இலையைச் சுமந்து சென்றது...!

என்னதான்
செய்கிறதுவென...?
அதனையே உற்று நோக்கினேன்...!

அந்த சிற்றெறும்பு
பயணித்தப் பாதையில்
எத்தனை தடைகள்...?

சுமந்த இலையைச்
சில நேரம் தூக்கியது
பல நேரம் இழுத்தது
அந்த சிற்றெறும்பு...!

இப்படியே இலையுடன்
அதன் போராட்டம் நீள
ஒரு இடம் வந்தது...!

சிறிய இடைவெளி
ஒன்று இருந்தது
தன் முன்னங்கால்களால்
நீட்டி எக்கிப் பார்த்தது...!

முடிவில் முயற்சி
தோல்வியையே தந்தது
அந்த சிற்றெறும்புக்கு ..!

இலையை கீழேவைத்து விட்டு
சுற்றி சுற்றி வந்தது
பிறகு இலையை எடுத்து
கொஞ்சம் கொஞ்சமாக
மீண்டும் நகர்த்தத் தொடங்கியது...!

பல இடங்களில்
பாலமாக இலையை வைத்து
அதன் மேலேயே
ஏறி இறங்கியது...!

நான் மிகவும்
ஆச்சரியமானேன்...!
ஒரு சிற்றெறும்பு
எவ்வளவு லாவகமாக
இவ்வளவு இடர்களை கடந்தது...?

ஆனால்
ஆறறிவுப் படைத்த நாமோ
ஒரு சிறிய
இடர் வந்தாலும்
துவண்டு போய்விடுகிறோம்...!

அச்சிற்றெறும்பு கடைசியாக
தன் இல்லம் வந்து சேர்ந்தது
அதன் நுழைவு வாயிலில்
ஒரு சிறிய ஓட்டை
மட்டுமே இருந்தது...!

எவ்வளவு முயன்றும்
இலையை அதனுள்
கொண்டுப் போக முடியவில்லை...!

இறுதியில் சிற்றெறும்பு
இலையைத் தூக்கி எறிந்தனவே
மீண்டும் புதுப்பணியை
நோக்கி விரைந்தனவே...!

மானிடனே
தேவையில்லாத
கஷ்டத்தோடு
போராடி போராடி
வாழ்வை வீணடிக்காமல்
புது விடியல் நோக்கி
சிற்றெறும்பைபோல
புறப்படு இன்றே...!

எழுதியவர் : நாகூர் கவி (1-Jan-14, 3:17 am)
பார்வை : 284

மேலே