வாழ்க்கை
காலையில் வெளிச்சத்துடன் உதிக்கும் சூரியன் மாலையில் இருளை தந்து மறைகிறது,
இருளை தந்துவிட்டது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் காலையில் இருந்து மாலை வரை உலகில் உள்ள பல உயிரினங்களுக்கு பயன்உள்ள பல நல்ல ஒளிகளை தந்துதான் மறைகிறது,
ஆனால் மனிதர்களாகிய நாமோ ஒரு இருளில் இருந்து வெளிவந்து என்ன செய்கிறோம் என்று தெரியாமல் காலம் போகும் போக்கில் வாழ்கிறோம்,
காலம் முடிந்த பின்பு ஒரு நிரந்தர இருளில் அடைக்கப்படுகிறோம் இதுதான் நம்முள் பலர் எந்த பயனும் இல்லாமல் ஒரு இருள் சுழ்ந்த வாழ்கையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..
இருளில் இருந்து வெளிவந்து மறுபடியும் இருளில் செல்லும் நாம் வெளிச்சத்தில் வாழும் சில காலமாவது பிறர்க்கு சிறிது நன்மை தரும் வாழ்கையை வாழ்ந்தாலே போதும் நாம் மறைந்தபின் நாம் செய்த நன்மை எனும் வெளிச்சத்தில் வாழ்வதை மற்றவர்கள் நம்மை பார்பார்கள்...