அந்திமக் காலத்திலே----அஹமது அலி----

அந்திமக் கால ஆசைகள்
வந்திடத் தடையோ அகவைகள்
முந்திடும் எண்ணம் முதுமையில்
பிந்திடும் செயல்கள் தளர்வில்!
(0)
காந்தி மங்கும் நயனங்கள்
சந்திக்க மறுக்கும் தூரங்கள்
மந்தித்த உடல் வேகங்கள்
அந்நியமாகும் அற்ப உலகங்கள்!
(0)
புந்தி முதிர் அனுபவங்கள்
உந்தி விரிக்கும் சிறகுகள்
கந்தை ஆகும் காலங்கள்
விந்தை உலகம் பாருங்கள்!
(0)
நீந்திடும் நினைவில் இளமைகள்
நிந்தனை செய்யும் உறவுகள்
பந்தம் மெலியும் உயிர்கள்
பந்தனாலயம் ஆகும் இல்லங்கள்!
(0)
அந்தரங்க உணர்வு ஊஞ்சல்கள்
அந்தரத்தில் அலையும் மேகங்கள்
பிந்துவில் உண்டான தேகங்கள்
இந்தனமாய் காயும் கோலங்கள்!
-----------------------------------------------------------
பந்தனாலயம்=சிறைச்சாலை
காந்தி=ஒளி
மந்தித்த= தாமதித்த
புந்தி=அறிவு
பிந்து=விந்து
இந்தனம்=விறகு
..........................................................................