சின்னக் கண்ணன் சிரிக்கிறான்

அப்பா என்று அழைக்கின்ற மொழி அழகு
அன்பாய் என் பெயர் சொல்லும் பேச்சழகு
சிரிக்கையிலே கன்னத்தில் குழி அழகு
சின்னதாய் ஒரு முத்தம்.. கொள்ளை அழகு
துள்ளித் துள்ளி ஓடி வரும் நடை அழகு
தோளின் மேல் தூங்கி விழும் சோர்வழகு
கோபத்தோடு ஒரு பார்வை பார்த்து விட்டால்
சிணுங்கிச் சிணுங்கி அழுகின்ற முகம் அழகு
கடைக்கேதும் செல்வதைத்தான் பார்த்து விட்டால்
உருண்டு பிரண்டு அடம் பிடிக்கும் செயல் அழகு
ஒளித்து வைக்கும்
பொருள்தேடி எடுத்துடைக்கும் அழகு
படுத்துறங்கும்
பொழுதெல்லாம் மேல் உறங்கும் அழகு
நல் இரவென்றும் பாராமல் விளையாடும் அழகு
இளங்காலைப் பொழுதினிலே சிரித்து எழும் அழகு
மண்ணோடு விளையாடும் குறும்பழகு
மழலை மொழியோ.. பேரழகு
கண் கோடி கொண்டாலும் போதாது
இந்தக் காட்சிகளை நான் கண்டு செருக்குறவே..