மனவிழிகள் அழுகின்றது - வசந்தவாசல் கவிதைக்கடல்- 2011 எனும் புத்தகத்தில் இடம் பெற்ற எமது கவிதை
நேர்மை மறைகிறது
நெஞ்சம் வலிக்கிறது
உழைப்பு நனைகிறது
உப்பாய் கரைகிறது
சத்தியம் வீழ்கிறது
சந்தர்ப்பவாதம் வாழ்கிறது
அன்பு மடிகிறது
அநியாயம் மலர்கிறது
நேசம் முடிகிறது
நேர்வழி அழிகிறது
பகல் வேசம் தெரிகிறது
பக்தி வேசம் எரிகிறது
நட்பு முறிகிறது
நல்லோர் கூடல் குறைகிறது
தமிழ் இனிக்கிறது
தலைமுறைக்கும் நிலைக்கிறது
சொந்தம் சிதைகிறது - பந்தம் பிரிகிறது
கடமை ஓய்கிறது
கண்ணீர் ஜெயிக்கிறது
இயற்கை அழுகிறது
இறையருள் சிரிக்கிறது
மனிதகுலம் உடைகிறது
மருத்துவம் ஒளிர்கிறது - மனதொடிந்து தேய்கிறது.