குழந்தைகளைக் குறை சொல்லாதீர்

கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு; அந்தக் கால வரலாறு இது. இன்று கற்றவர்களை உருவாக்குவதில்லை
கல்வித் தொழிற் சாலைகள். பண்பைக் கற்றுத் தருவதில்
நாட்டம் சிறிதுமில்லை. ஒழுக்கத்தின் மேன்மையை
அறியாதரே திறமையான பயிற்றுனர்கள். மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை முடமாக்கி மதிப்பெண் குவிக்கும்
வழிகளை மற்றும் கற்றத் தரவே கல்வி நிலையங்கள்.
மொழிப் பாடங்களில் வரும் நல்ல கருத்துக்களைச்
சிந்திக்க வைத்தாலே நல்ல மனிதர்கள் ஆகிடுவார்
புரிந்தவர் எல்லாம். புரிய வைக்காமல் தெளிவு படுத்தாமல் இயந்திரத் தனமாய் பாடங்களை மனப்பாடம் செய்ய வைத்து நல்ல மனிதனாய் வரவேண்டியவரை பொருளீட்டும் வழிகளை மட்டும் கற்றுத் தருவதுவா கல்வி?
நூல்பல கற்பனுக்கே சிந்தனை ஊற்றாய்ப் பெருக்கெடுக்கும். பாடங்களை மட்டுமே தேர்வுக்கு படிக்க வைப்பவர்கள் கல்வியைப் புகட்டுவதில்லை அறிவை வளர்ப்பதில்லை. இயந்திரமாய் மாற்றப்பட்டவர்களுக்கு இயந்திரத்தனமாய் மதிப்பெண் பெறவும் இயந்திரத் தனமாய் வாழவும்தான் தெரியும் மனித நேயம் பற்றி அவர்கள் தெரியாதிருப்பதற்கு பெற்றவர்களும் மனப்பாடத்திறனை மட்டும் வளர்த்த பயிற்சியாளர்களுமே காரணம். குழந்தைகளைக் குறை சொல்லாதீர்.