காதலாவது கத்தரிக்காயாவது
![](https://eluthu.com/images/loading.gif)
காதலாவது ... கத்தரிக்காயாவது .
என்று சொல்வதை நிச்சயமாகக் கேள்விப் பட்டிருப்பீர்கள்.
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் அப்படி என்ன தொடர்புள்ளதென்று எப்பொழுதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா .. நீங்கள்.
கத்தரிக்காய்கள் பல நிறங்ளிலும் பற்பல வடிவங்களிலும் கிடைக்கும் ஒரு காய்கறி.
சிலர் மனைவி சொல்வதைத் தட்டாமல் எப்பொழுதும் செய்தால் அது பெரிய கத்தரிக்காய்.
சில சமயங்களில் மட்டும் தலையை ஆட்டிவிட்டு, ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டால் சின்ன கத்தரிக்காய்.
ஒருவர் மனைவியின் மீது வைத்திருக்கும் அன்பை .. அதாவது கத்தரிக்காயை வைத்து நிர்ணயித்து விடலாம் என்பதைத் தான் சூட்சமமாக காதலையும் கத்தரிக்கயையும் சம்பந்தப் படுத்தி இப்படி ஒரு பழமொழியை உருவாக்கி இருக்கவேண்டும்.
இனி உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.