அடக் கடவுளே
பருத்தியாக வெடித்தபோது
பக்குவமாய் நான் சிரித்தேன் - எனைப்
பறித்தே பதப் படுத்தினான் மனிதன்......!
எனவே
ஜன்னலில் திரைச் சிலையாய்
சந்தோசமாய் ஆடினேன்.....
வாசலில் மிதியடியாய்
வருத்தமுற மிதி வாங்கினேன்....
ஏனிந்த சந்தோசம்
ஏனிந்த மிதியடி
என்றே இறைவனிடம் கேட்டேன்......
அதோ பார் என்று
ஆட்காட்டி விரலை நீட்டிக் காட்டினான்
அந்த ஆண்டவன்
யாரோ ஒரு மனிதனால் அழகாக
பிரேம் செய்யப்பட்ட அந்த கடவுள் படம்
யாரோ ஒரு மனிதனால் தரையில்
போடப்பட்டு உடைந்து கிடந்தது........
இப்போது நான் சுற்றிலும் பார்க்கிறேன்......
மனிதர்கள்.....
மனிதர்கள்....
மனிதர்கள்....
இறைவனைத் தேடுகிறேன்........மீண்டும்....
இன்னுமா நீ இருக்கிறாய் என்று
என்னை கிழிக்கத் தொடங்குகிறான் மனிதன்.....