அன்பு அண்ணன்

உறவென்று நீயும்,
இருந்ததினால்,
புது உயிராய்,
நானும் பிறந்தேன்,

அன்பை பொழிவதில்,
அண்ணன் நீயும்,
என் அம்மா தான்,

உன் கை பிடித்து தான்,
நடை பழகினேன்,
உன் பார்வை கூட,
என்னை பாதுக்காத்தது,

நான் சொன்னது,
மட்டும் அல்ல,
நான் சொல்ல நினைத்தும்,
நீ வாங்கி தந்தாய்,

என் காய்ச்சல் கூட,
உன்னை அழ செய்யும்,
உன் கண்ணீர் மருந்தால்,
என் காய்ச்சல் போகும்,

அண்ணன் நீ தான்,
என் அன்பு தோழன்,

தப்புக்கள் நான்,
செய்ய,
தண்டிக்க உன்,
கை வந்தால்,
உன் மறு கையே,
அதை தடுக்கும்,

வெளிநாட்டு வேலை,
கூட,
வேண்டாம் உனக்கு,
வீட்டோடு மாப்பிள்ளை.
இருந்தால் பார் எனக்கு,

நான் பிறக்கும் முன்னே ,
எனக்காய்,
கடவுள் படைத்த,
பொக்கிஷம் நீ,

எழுதியவர் : (4-Jan-14, 12:25 pm)
Tanglish : anbu annan
பார்வை : 2631

மேலே