என் ஆசை
------ என் முதல் படைப்பு ------
மகிழ்ச்சி வேண்டும் மனதார...
மடியும் முன் யான் கொண்டாட!
நெகிழ்ச்சி தரும் நிலைசூழ...
நெஞ்சம் கொஞ்சம் தடுமாற!
இகழ்ச்சி இன்றி இசைப்பாட...
இதயம் சேர்ந்து இசைந்தாட!
புகழ்ச்சி நிறை புடைசூழ...
பண்பும் ,பரிவும் செழித்தாள!
நினக்கு.... மகிழ்ச்சி வேண்டும் மனதார...
மடியும் முன் யான் கொண்டாட!!! :)
(பிழை இருப்பின் மன்னிக்கவும்)
-கவிக்கிருக்கி. மீனு தேவன்