கத்துக் குட்டியாய்
கத்துக் குட்டியாய்க்
கவிதையில் கை வைத்தேன் !
பொங்கிய பால்
போன புகை...
கொதித்த உலை...
வெடித்த கடுகென...
கண்டதெல்லாம் கவிதையானது !
கவிதையின்பமறியாது இருந்திட்டோமே
இதுகாறுமென...
மாய்ந்து மருகியது மனம் !
அடுப்பிலோ
பிடித்துக் கருகிய மணம் !
படித்ததில் பிடித்தது...
வடித்ததில் பிடித்தது என்று
கவிதை மனம் அசைபோட