எனது சந்தோசம் எதனால் கிடைக்கிறது

சன்னல் வழி கை நீட்டினேன்
சாரல் என்னை முத்தியது....

சந்தோசத்துக்கு இதுவும் வழியென
சங்கதி என்னை எட்டியது....

சட்டென்று பதறிப் பதறி காலத்தை
சாகடிக்க நான் விரும்பவில்லை...

சாவகாசமாக தட்டி விடுகிறேன்...
சர்ரென்று காலில் ஏறிவரும் கட்டெரும்பை...

தடாலென்று கீழே விழுந்த எறும்பு
தன்னிலை வராமல் கிடக்கிறது....

ஐயோ கொன்று விட்டேனா எறும்பை...?
பதறாமல் என்னால் இருக்க முடியவில்லை...

இந்த சாரல் மழை வராமல் இருந்திருக்கலாம்...
இந்த அற்ப சந்தோசம் எனக்கு எதற்கு ?

ஜீவ காருண்யம் சொன்ன வள்ளலார் படம்
சிறைபடுத்தப் பட்டிருந்தது சுவர் புகைப் படத்தில்..

அதை மாட்டுவதற்காக
ஆணி அடித்தபோது....

ஆயுளை முடித்துக் கொண்ட
மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கரை படிந்து.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Jan-14, 2:08 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 105

மேலே