நிலா காதலியே ஓடி வா
நிலவே உன் முகம் காட்டு
நீளும் இரவில் ஒளியேற்று
நினைவே என்றும் நீயாச்சு
நீ வந்தால் இதயம் சுகமாச்சு....
நீலவானக் கூரையின் கீழ்
நீண்டு செல்லும் சாலையில்
விண்மீனின் மந்த ஒளியில்
மனசும் சுகமின்றிப் போனதே...
நிலா காதலியே ஓடி வா
என்னுயிரோடு ஒன்றாக வா
நீயின்றித் துடிக்கிறேன்
தரையில் விழுந்த மீனாய் ......
நேற்று நீ பதித்த
முத்தத்தின் ஈரம் காயுமுன்னே
என்னோடு ஒன்றி விடு
நிலாக் காதலியே வந்துவிடு.....!

