ஆருயிர் நண்பனே - உண்மை

ஆருயிர் நண்பனே ♥

நம் கல்லூரியில் நான் கண்ட முதல் வாசகம் நீ...

கண்ட நாள் முதல் நண்பனானாய்......

சின்ன சின்ன குறும்புண்டு,சேட்டைகளுண்டு,

நல்ல குணமுண்டு,படிப்புண்டு,

தானுண்டு,தன் உறவுகளுண்டு என்றிருந்தாயடா....

பொறுமையின் நுழைவு வாசலே திடீரென்று ஆற்றோடு போனாயேடா !...

சின்ன வலியையும் கூட தாங்க மாட்டாயேடா !.....

அந்த நரகத்தில் நீ எப்படி துடிதுடித்திறுப்பாயோ !..
வேதனைப்பட்டிருப்பாயோ !

உந்தன் மரணப்போராட்டத்தைக் கண்ட
அந்த கடவுளுக்கும் காப்பாற்ற மனமில்லையா !..

உன் வீட்டிற்கு சென்றிருந்தேன் நண்பனே...

அங்கு நீ சுற்றி சுற்றி வந்த உன் அன்னையும் ,
உன் வீட்டு திண்னையும்,
நீ வளர்த்த மாடுகளும் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.....

நான் எப்படி புரிய வைப்பேன் நண்பனே நீ இந்த
மண்ணுலகில் இல்லையென்று....

நான் செல்லுமிடமெல்லாம் உன் கால் தடமும் உன் நட்பு வாசனையும் தானடா....

எல்லாருக்கும் ஆறுதல் கூறிவிட்டேன் என் நண்பனே......

எனக்கு ஆறுதல் யார் சொல்லுவார் இங்கு உன்னைத் தவிர........

என்றும் உன் நட்பின் நினைவுடன் உன் ஆருயிர்
நண்பன் ♥ ஆனந்த்

எழுதியவர் : ஆனந்த் (4-Jan-14, 7:17 pm)
பார்வை : 417

மேலே