இடலி வரும் தோசை வரும் கானா பாடல்

இரவும் வரும் பகலும் வரும் பாடல் நகல்

இட்லி வரும் தோசை வரும்
மாவு ஒன்று தான். . .
இடியாப்பம் வரும் புட்டும் வரும்
அரிசி ஒன்று தான். .அரிசி ஒன்று தான் . .

கனவும் வரும் குறட்டை வரும்
உறக்கம் ஒன்றுதான்
மூட்டைப் பூச்சி வரும் கொசுவும் வரும்
கடிகள் ஒன்று தான் கடிகள் ஒன்று தான். .

பஸ்சும் வரும் காரும் வரும்
ரோடு ரோடு ஒன்று தான் -- நீ
போகும்போது ரைட்டுல போனா
முதுகுல டின்னுதான் முதுகுல டின்னுதான். .

கங்கை நதி காவிரியும் பாயும் நாடு தான் -அதை
பிரித்து வைத்து பார்ப்பதுவும் மனிதம் ஒனறு தான்
இதை நான் பாடுவதும் பாடாததும்
இரண்டும் ஒன்று தான். . இரண்டும் ஒன்று தான் !

எழுதியவர் : மல்லி மணியன் (5-Jan-14, 10:54 am)
பார்வை : 179

மேலே