தடியெடுத்தவன்

தடியெடுத்த காரணத்தால்
நீ! தண்டல்காரனல்ல.
ஆரியக் கிண்டல்காரன்.
தீண்டாமை மழிக்கச் செய்தே
தாடி மழிக்க மறந்து போனவன்.

தலைவிரி கோலமாய்க்
கிடந்த தமிழ்ப்பெண்ணுக்கு
ஈரோடு பேன் வாங்கிய
ஈரோட்டுத் தாய்.

நீ இல்லாமல் இங்கே
கழகங்களு மில்லை,
கலகங்களு மில்லை.

உன் கருப்புச் சட்டை கசக்கித் தான்
எமக்கு வெள்ளைச்சட்டை

வெளுத்துக் கொடுத்தாய்,

சீர்திருத்தினாய்,
தமிழ் எழுத்தையும் - தமிழன்
தலை எழுத்தையும்.

உருவத்தில்
சிங்கத்தைப் படிஎடுத்தாய்
கருவத்தில்
தன்மானத் தடியெடுத்தாய்.
கடவுளை மறுத்த எம் கடவுளே!
ஏசுவின் பருத்த வடிவமே!
மீண்டும் உயிர்த்தெழுந்து வா!
'இவர்கள் இன்னும் திருந்தவில்லை'.



(தன்மான ஆடை நெய்து கொடுத்த
தந்தை பெரியாருக்கு...)

எழுதியவர் : சதீஸ்குமார்(கவியன்பு) (5-Jan-14, 7:51 pm)
பார்வை : 81

மேலே