கடைசிக் கேள்வி
நடக்கக் கூடாதது
நடந்து விட்டது
மேற்படி காரியம்?
விரைவாய் நடந்தது
ரகசியக் கூட்டம்.
தலையணை பொத்தித்
தலைமுறை வளர்ப்போமா?
நெல் மணியைப்
பாலில் கலப்போமா?
அரளி விதையில்
அனைத்தும் முடிப்போமா?
எல்லாம் யோசித்து
இறுதி முடிவானது.
கல்லறை பள்ளிக்கு
போகும் முன்
கடைசியாய் கேட்டது
மழலை
அம்மா!
காமத்துப் பாலை
நீ பருகிவிட்டுக்
கள்ளிப்பால் மட்டும் எனக்கா?
(கள்ளிப் பாலூட்டிகளுக்கு...)