தெகிட்டாத பயணம்

காண்பதற்கு
பரவசம் தரும்
சிக்கு புக்கு ரயிலே
நீ எங்கே
செல்கிறாய்..!
உன் வருகை
கண்டு சிறுவர்கள்
முதல் பெரியவர்கள்
வரை ஆனந்தம்
கொள்கிறார்களே..!
இன்னும்
எத்தனை முறை
உன்னோடு
பயணித்தாலும்
தேகிட்டாத இன்பமே
ஏற்படுகிறதே..!
நீ கடந்து
செல்லும் தூரமோ
நீ விரைந்து
செல்லும் நேரமோ
தெரிவதில்லையே..!
எங்கு சென்றாலும்
உன்னோடு
பயணம் செய்த
நாட்கள் வரையப்படாத
ஓவியமே..!
உன் வருகையை
எதிர்பார்த்து காத்திருக்கும்
பயணிகளின்
நானும் ஒருவன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
