இளம்தளிர்கள்

பணிவைப் பழகு
இனிமை உலகு..!
எதுதான் அழகு ?
இதுதான் பழகு...!

என்றே நானும் சொல்ல நினைத்து
எழில் தளிரே உன் அருகில் வரவே
எடுத்து ஒரு அடி முன்னால் வைத்தேன்...

ஐயோ அப்பா
ஐயோ அப்பா...

அதற்குள் உன் கையிலும்
அழகாய் மொபைலா....?!

கூனிக் குறுகியே பார்வைகள் குவித்து
குறைபல நிறைத்து கூப்பாடு போடாது..

செவிகளுக்குள்ளே போனையும் மாட்டி
சாகாத பிணமென சாலையில் நடக்கும்

மனிதத் தோற்றத்தின் உரு உனக்கெப்படி ?

அதோ சூரியன்......

அது உனது எதிர்காலம்.......

தயவு செய்து நிமிரு

தயவு செய்து நிமிரு.....

அகண்ட விழிகளால் அகிலம் விழுங்கு என
அந்த பாரதி அன்று சொன்னான்.....

ஒரு அங்குல மொபைல் ஸ்க்ரீனில்
ஒடுங்கி உன் பார்வை குறுகியதேன்...?

என் கேள்விக்குப் பதில் சொல்.....

முதலில் இயர் போனைக் கழற்று.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Jan-14, 2:19 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 213

மேலே