தன்னம்பிக்கையொரு தனிபலமே

நல்மனதோடு வாழ்ந்த நாட்களில்,
குற்றவாளியாக இச்சமூகமென்னை
ஒதுக்கிச்சென்றது!
ஓரங்கட்டப்பட்டேன்
ஒருமுறையல்ல இருமுறையல்ல
பலமுறை ........
என் பக்கத்தில் இருந்தவர்களாலேயே.....!
ஒன்றுமே செய்யாதபோதும்!!!!!
ஓவென்று அழுதேன்!
ஒன்றும் புரியாமல் .........
கண்ணீரைத் துடைக்க ஆளில்லை
என்மேல் வெந்நீரை ஊற்றி,
வேடிக்கைப்பர்த்தவர்கள் ...
எத்தனையோ ஆயிரங்கள் !
அத்தனையும் தாண்டி ,
எத்துணையுமின்றி
எற்றம் பெற்றிருக்கிறேன் !
எதுக்குமே உதவாது என்று
ஒதுக்கப்பட்ட சமூகத்தில் .....!!
என் தன்னம்பிக்கையின்
தனிபலத்தால் .........!!!!!

எழுதியவர் : Antonysam (6-Jan-14, 2:21 pm)
சேர்த்தது : அந்தோனி sam
பார்வை : 148

மேலே