அண்ணி வீட்டில் அண்ணன் கானா பாடல்

புருஷன் வீட்டில் வாழபோகும் பாடல் நகல்

அண்ணி வீட்டில் வாழபோகும் அண்ணே
என்னருமை அண்ணே -- சில
அறிவுரைகள் சொல்லுறேன்
கேளு முன்னே !

அண்ணி ஆபீஸ் போகும் போது
டாட்டா சொல்லோனும்
அவங்க வீட்டு வேலைய
நீட்டா நீயும் பண்ணோனும் !
அவங்க கைய கால நீவி
சொடுக்கு எடுக்கோனும் !

அடுத்த வீட்டுக் காரன்
கூட பேசாதே
அவன் அரிசி பருப்பு
இரவல் கேட்பான் தராதே !
கண் அயர்ந்து நீயும்
கதவை திறந்து தூங்காதே !

எதிர்த்து நீயும்
எப்பொழுதும் பேசாதே !
உன்னை படிக்க வச்சு
பட்டமும் தந்து
பாதி விலைக்கு வித்துபுட்ட
அப்பா பேரை நீயும்
நல்லா வாங்கோனும். . . ! (அண்ணி )

எழுதியவர் : மல்லி மணியன் (6-Jan-14, 2:28 pm)
பார்வை : 189

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே