வெளிநாட்டு தந்தை
நிறைமாத கர்பினியான
மனைவியை விட்டு
மனமில்லாமல் அவள்
நினைவுகளை எடுத்து
விடைபெற்றான்
வெளிநாட்டிற்க்கு
தாய் தந்தையின்
ஆசிர்வாதத்தையும்
தன் மனைவியின்
ஆசைகளையும்
சுமந்து பறந்தான்
வந்தடைந்தேன் என்று சொல்ல
கைபேசியில் அழைக்க
கண்கள் கண்ணீர் விட்டது
அவன் குழந்தை அழுகை கேட்டு
உங்கள் பிரதிபலிப்பாய்
என்னுடன் நம் மகன்
என்று மனைவி கூற
சட்டென்று சிலிர்த்தது
இன்று
மடிக்கணினி ஆனது
மடியில் மகனாய்
மச்சான் அனுப்பிய
புகைப்படத்தால்
புதிய வேளையில்
விடுப்பு எடுக்க முடியாமல்
புதுப்புது ஆடைகளையும்
விளையாட்டு பொம்மையும்
வாங்கி காத்திருப்பான்
தன் குழந்தையின்
தாய்ப்பால் நாற்றத்தையும்
தயங்காத சிரிப்பையும்
தவழ்ந்த அழகையும்
தட்டித்தத்தி வரும் நடையையும்
தடுமாறிய மழலையும்
தழுவும் பிஞ்சு கைகளையும்
அருகில் இருந்து
அனுபவிக்க முடியாமல்
அழுது கழித்தான்
நாட்களை
வருடம் கடந்ததும்
விடுப்பு எடுத்து
வாங்கி சேர்த்த
வண்ண ஆடையும்
வட்டமிடும் ரயிலையும் எடுத்து
விமானத்தில் விரைந்து
வந்தடைந்தான்
அப்பா என்ற குறலை கேட்டு
ஆனந்த கண்ணீருடன்
அமைதியாய் ரசித்தான்
தன் ஐம்புலன்களையும்
அடக்கி வைத்து
மகனின் எதிர்காலத்தை நினைத்து
மனதின் நிகழ்கால இச்சைகளை
தியாகம் செய்யும்
ஓர் வாழ்கை போராளியே
வெளிநாட்டு தந்தை.......