இரு சக்கர தேவதை

எங்கே சென்று
விட்டாய் எங்களின்
இரு சக்கர தேவதையே
உன்னை என்றும்
மறவாத உள்ளங்களில்
நானும் ஒருவன்

பள்ளி பருவத்திலே
நீ எங்களுக்கு
ஹீரோ ஹோண்டாவாக
காட்சியளித்தாய்..!

நண்பர்கள்
உடன் இருந்தால் நீ
பஜாஜ் பல்சராக
காட்சியளித்தாய்...!

ஹெர்குலஸ்
என்ற பெயரில் வளம்
வருவதில்
நீயே தலை சிறந்து
விளங்கினாய்...!

முதுமை
கொண்டவர்க்கு
உறவாகவும்
இளமை உடையவர்க்கு
உயிராகவும்
வாழ்ந்தவனே..!

காலம்
என்னும் கயிற்றில்
சிக்கிகொண்ட
கதிரவன்
போல் மறைந்து
விட்டாயே...!

உன்னோடு
என்றுமே வளம் வர
உன்னுடைய
ரசிகனாக உன்னை
எதிர்பார்த்து
வாழும்
அழகிய உள்ளம்

எழுதியவர் : லெத்தீப் (7-Jan-14, 8:33 pm)
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே