பெண்ணென்பவள்

நிலவு
வானம்
வானவில்
பூ
என்றும்

கண்ணே
மண்ணே
பொன்னே
குப்பைத்தொட்டியே
என்று கூட வர்ணித்தோம் !

ஆனால்
பெண்ணை பெண்ணாக மட்டும்
பார்க்க மறந்தோம்!

பெண்ணென்பவள்
தங்கை தாயாக
தாய் தோழியாக
உற்றவள் உயிராக
ஒவ்வொரு வீட்டிலும்
உருமாறி நிற்பவள் !

குடிகாரனே தெய்வமென்றும்!
அடிக்கும் மகனே ஆதரவென்றும்!
கணவனை இழந்தால்
கனவில்லை என்றும்
ஒவ்வொரு ஊரிலும்
ஒடுங்கி கிடப்பவள்!

அரசாளும் மன்னராக
கருனையுற்ற அன்னையாக
விண்வெளி தொட்ட வீரனாக
ஒவ்வொரு நாட்டிலும்
உயர்ந்து நிற்பவள் !

எழுதியவர் : கோடீஸ்வரன் (7-Jan-14, 8:21 pm)
பார்வை : 316

சிறந்த கவிதைகள்

மேலே