36 நான் பயப்பட்டதில்லை ஆனால் பயப்படுகிறேன்

சொந்தக் கவிதை - 36

பெற்றோரைக் கண்டு நான் பயப்பட்டதில்லை
உடன்பிறந்தோரைக் கண்டு நான் பயப்பட்டதில்லை
உறவினரைக் கண்டு நான் பயப்பட்டதில்லை
உறவில்லாதவரைக் கண்டு நான் பயப்பட்டதில்லை
சுற்றம் கண்டு நான் பயப்பட்டதில்லை
சமூகத்தைக் கண்டு நான் பயப்பட்டதில்லை
நண்பர்களைக் கண்டு நான் பயப்பட்டதில்லை
எதிரியைக் கண்டு நான் பயப்பட்டதில்லை

ஆசிரியரைக் கண்டு நான் பயப்பட்டதில்லை
சகமாணவனைக் கண்டு நான் பயப்பட்டதில்லை
உயர்அதிகாரியைக் கண்டு நான் பயப்பட்டதில்லை
கீழ்பணிபுரிபவர்களைக் கண்டு நான் பயப்பட்டதில்லை
மனைவியைக் கண்டு நான் பயப்பட்டதில்லை
குழந்தைகளைக் கண்டு நான் பயப்பட்டதில்லை
இளமையைக் கண்டு நான் பயப்பட்டதில்லை
முதுமையைக் கண்டு நான் பயப்பட்டதில்லை
ஆனால்என்னைக் கண்டு நான் பயப்படுகிறேன்
என் மனசாட்சியைக்கண்டு நான் பயப்படுகிறேன்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (7-Jan-14, 8:06 pm)
பார்வை : 85

மேலே